பிரிட்டனில் 20 ஆயிரத்தைத் தாண்டியது பலி
பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி 20,319 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி 20,319 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் உள்ளது. இந்த நோய்த் தொற்றால் பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது.
அதன்படி, 24 மணி நேரத்தில் 4,913 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,377 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதேசமயம், 24 மணி நேரத்தில் அங்கு 813 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 20,319 ஆக உயர்ந்துள்ளது.