முகப்பு
உலகம்

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 331 பேர் பலி

​ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 331 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2020 at 5:31 PM
கோப்புப்படம்
பகிர்:


ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 331 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் முன்னணியில் உள்ளது. அங்கு கடந்த சில நாள்களாகவே 24 மணி நேரத்தில் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வந்தது. நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி 24 மணி நேரத்தில் 288 பேர் பலியாகினர். மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் அங்கு பலியானோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 331 ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்பெயினில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 23,521 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.