சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கரோனா; பெரும்பாலானோர் வெளிநாட்டினர்
சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி புதிதாக 528 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பெரும்பாலானோர் வெளி மாநிலத் தொழிலாளர்கள்.
Advertisement
இதை அடுத்து, அந்நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,169 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. சுமார் 1,188 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது என்றும் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.