முகப்பு
உலகம்

ரஷியாவில் மேலும் 5,765 பேருக்கு கரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,12,485 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,12,485 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 ஆவது நாடாக ரஷியா உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஒரேநாளில் 5,765 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,12,485 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 13,269 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தற்போது வரை 6,00,250 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →