முகப்பு
உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு தொற்று; பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,14,878 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,14,878 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், சமீபமாக பாதிப்பு சற்று குறைந்துள்ளது. எனினும், உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 4,14,878 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 4,855 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 1.75 லட்சம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →