முகப்பு
உலகம்

மேற்கு வங்கத்தில் கரோனா பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு

மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் கரோனா பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 3 மே, 2020 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் கரோனா பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் மமதா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பத்திரிகையாளர்கள் உள்பட கரோனா பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும், பத்திரிகையாளர்கள் கடமைகளை அச்சமின்றி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.

Advertisement

தொடர்ந்து, சமூகத்திற்கு ஊடகவியலாளர்கள் செய்த பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம். அவர்களது நலனுக்காக மேற்குவங்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகறது என்றும் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்கத்தில் 33 உயிரிழப்புகள் உள்பட 922 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.