சிங்கப்பூரில் சுமார் 4,800 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்களில் சுமார் கடந்த ஏப்ரல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் 4,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்களில் கடந்த ஏப்ரல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 4,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கரோனா பாதித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18,205 ஆகும். இதுவரை கரோனா பாதித்து 18 பேர் மரணம் அடைந்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கரோனா பாதித்த இந்தியர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்புதான் இருப்பதாகவும், அனைவரின் உடல்நிலையும் சீரடைந்து வருவதாகவும் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரத் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஏப்ரல் மாதத்திலேயே சிங்கப்பூர் அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக, அதிகப்படியான மருத்துவப் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையால், கரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.