முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 566 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 3.10 லட்சத்தைத் தாண்டியது!

பாகிஸ்தானில் புதிதாக 566 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 3,10,841 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 28 செப்டம்பர், 2020 at 1:50 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

பாகிஸ்தானில் புதிதாக 566 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 3,10,841 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,466 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று இதுவரை 2,96,022 பேர் குணமடைந்துள்ளனர். 451 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 28,887 உள்பட இதுவரை 34,49,541 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மாகாண வாரியாக பாதிப்பு விவரங்கள்:

சிந்து - 136,017, பஞ்சாப் - 99,219, கைபர்-பக்துன்க்வா- 37,701, இஸ்லாமாபாத் - 16,470, பலுசிஸ்தான்- 15,092, கில்கித்-பல்திஸ்தான்- 3,681 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 2,661 பேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.