வங்கதேசத்தில் ஏப்.5 முதல் ஒரு வாரம் பொது முடக்கம் 
உலகம்

வங்கதேசத்தில் ஏப்.5 முதல் ஒரு வாரம் பொது முடக்கம்

நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கதேசத்தில் ஏப்ரல் 5 முதல் ஒரு வாரம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 

IANS

நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கதேசத்தில் ஏப்ரல் 5 முதல் ஒரு வாரம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அமைச்சர் கூறுவதாவது, 

டாக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்பில் வங்கதேச சாலையில், போக்குவரத்து அமைச்சர் ஒபைதுல் காதர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும், கரோனா புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பொது நிர்வாகத்துறை அமைச்சர் பர்ஹாத் உஷ்சைன் தெரிவித்துள்ளார். 

தொழிற்சாலைகள் அனைத்தும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஷிப்டுகளில் வேலை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொது போக்குவரத்தையும் நிறுத்திவைத்து மக்கள் வீடுகளில் தங்குமாறு கூறப்பட்டுள்ளன. மார்ச் 17ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிட்டுள்ளது. 

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த மே 31, 2020 தேதியன்று பூட்டப்பட்ட அலுவலகங்கள், பொது போக்குவரத்து, உள்நாட்டு விமானங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நிலைமை மோசமடைந்தால் மீண்டும் கடுமையான விதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,830 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 6,24,594 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT