உலகம்

அஸ்ட்ராஜெனெகா கரோனா தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திய நெதர்லாந்து

DIN

அஸ்ட்ராஜெனகா கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பூசிகள் குறித்த பல்வேறு அச்சங்கள் மக்களிடம் நிலவி வரும் நிலையில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அஸ்ட்ராஜெனகா கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 60 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் பலியான நிலையில் அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நெதர்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தப்பட்ட பயனாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ள நெதர்லாந்து அரசு மூளை ரத்தக்கசிவு பாதிப்பும் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி நெதர்லாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

முன்னதாக ஜெர்மனி அரசு கரோனா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT