உலகம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

IANS

நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இது நியூசிலாந்தின் கிழக்குக் கடலைத் தாக்கியதோடு, வடக்கு தீவிலும் பரவலாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (உள்ளூர் நேரம்) 7.37 மணிக்கு ஏற்பட்டது. தே அரரோவாவிலிருந்து கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், 33 கி.மீ ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக புவியியல் தகவல் மையமான ஜியோநெட் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

கடந்த மாதம், மூன்று வலுவான நிலநடுக்கங்கள் வட தீவின் கரையிலிருந்து கடலைத் தாக்கின, இதன் விளைவாக கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT