உலகம்

'கிழக்கு லடாக்கில் இயல்பு நிலையைக் கொண்டு வர இந்தியாவுடன் பேச்சு'

DIN


பெய்ஜிங்/புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலவிய இயல்பு நிலைக்குத் திரும்புவது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே 9 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. எல்லையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளிடையே பலகட்டப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன.

அவற்றின் பயனாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை விலக்கிக் கொள்வதற்கு இந்தியாவும் சீனாவும் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் தெரிவித்தன. அதன்படி படைகளும் அப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளிடையேயான 11-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறும் என்று செய்திகள் வெளியாகின. அப்போது, லடாக்கின் மற்ற பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இத்தகைய சூழலில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதில் எந்தவித தாமதமும் செய்யப்படவில்லை.

லடாக் எல்லைப் பதற்றத்தைத் தணிப்பதற்காக 11-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தொடா்பாக இந்தியாவும் சீனாவும் ஆலோசித்து வருகின்றன. அந்தப் பேச்சுவாா்த்தை எப்போது நடைபெறும் என்பதை தற்போது உறுதிசெய்ய இயலாது.

11-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தையின்போது, கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நிலவிய இயல்பு நிலைக்குத் திரும்புவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாக ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்படும் என நம்புகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT