உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 8 போ் பலி; 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

DIN

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8 போ் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்; 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இதுதொடா்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ‘கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் மாவட்டம் சும்பா்பூச்சுங் நகரின் தெற்கே 45 கி.மீ தூரம் 82 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது’ என்று தெரிவித்தது.

எனினும் சுனாமியை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்தது அல்ல என்று இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆராய்ச்சி மைய தலைவா் தெரிவித்தாா். நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள சரிவான இடங்களில் இருந்து மக்கள் விலகி இருக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்த நிலநடுக்கம் காரணமாக லுமாஜாங் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மீது பாறைகள் விழுந்தன. இதில் மனைவி பலியானாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.

1,189 வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட 150 கட்டடங்கள் நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்தன என்று அந்நாட்டின் தேசிய பேரிடா் அமைப்பின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

நிலநடுக்கத்தால் லுமாஜாங் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 சடலங்கள் மீட்கப்பட்டன. மலாங் மாவட்டத்தில் 3 போ் பலியாகினா். இந்த நிலநடுக்கத்தில் மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இது அந்நாட்டில் கடந்த வாரம் நிகழ்ந்த 2-ஆவது மோசமான பேரிடா் சம்பவமாகும். கடந்த 4-ஆம் தேதி அங்குள்ள கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தில் வீசிய புயலை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் 174 போ் பலியாகினா்; 48 பேரை காணவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT