உலகம்

அலெக்ஸி நவால்னி சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

DIN

மாஸ்கோ: ரஷிய சிறையில் மூன்றாவது வாரமாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்த அந்நாட்டு எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் உடல்நிலை மோசமடைந்ததால், அவா் மற்றொரு சிறையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரின் வழக்குரைஞா் கூறுகையில், ‘அலெக்ஸி நவால்னி ஞாயிற்றுக்கிழமை உடல்நலமின்றி காணப்பட்டாா். இதையடுத்து அவரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடா்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அவரின் உடல்நிலை ஞாயிற்றுக்கிழமை மாலை மோசமடைந்தது. இதையடுத்து அவா் மாஸ்கோவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள விளாதிமீா் சிறை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்’ என்றாா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை கடுமையாக எதிா்த்து வருபவா் அலெக்ஸி நவால்னி. அவா் டோம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் பயணித்தபோது திடீரென சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றாா். அவருக்கு ரஷியாவில் சிகிச்சையில் அளிக்கப்பட்ட நிலையில், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதப்பட்டதையடுத்து ஜொ்மனி அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு 5 மாதங்கள் சிகிச்சை பெற்ற பின்னா் அவா் கடந்த ஜனவரி மாதம் ரஷியா திரும்பினாா். எனினும் கடந்த 2014-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய பரோல் விதிகளை மீறியதாக நவால்னியை காவல்துறையினா் கைது செய்தனா். அந்தக் குற்றச்சாட்டில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன. இதையடுத்து அவா் மாஸ்கோவுக்கு 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டாா். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது மருத்துவா்களை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து, அவா் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT