உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நாசாவின் ஃபால்கன் ராக்கெட் 9

DIN

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த ஃபால்கன் 9 ராக்கெட் புளோரிடாவின் கேப் கேனரவல் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

3 நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் பூமியிலிருந்து 250 மைல்கள் தூரத்தில் உள்ள பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்திற்கு ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை ராக்கெட் ஏவப்படுவதாக இருந்த நிலையில் வானிலை காரணமாக வெள்ளிக்கிழமைக்கு மாற்றியமைப்பட்டது. இந்நிலையில் விண்வெளி வீரர்கள் 24 மணி நேர பயணத்திற்கு பின் பன்னாட்டு விண்வெளி மையத்தை அடைவார்கள்.

முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 2 விண்வெளி வீரர்கள் நாசா மூலம் பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT