முகப்பு
உலகம்

விருது கிடைக்கும் என  எதிர்பார்க்கவில்லை

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, "தி ஃபாதர்' திரைப்படத்தில் நடித்த அந்தோணி ஹாப்கின்ஸ்-க்கு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
விருது கிடைக்கும் என  எதிர்பார்க்கவில்லை
பகிர்:

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, "தி ஃபாதர்' திரைப்படத்தில் நடித்த அந்தோணி ஹாப்கின்ஸ்-க்கு வழங்கப்பட்டது. ஆனால், விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கடந்த ஆண்டில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற ஜோகுயின் ஃபீனிக்ஸ் விருதைப் பெற்றுக் கொண்டார். 

ஆஸ்கர் விருது பெறுபவர் அதை ஏற்றுக் கொண்டு உரையாற்றுவது வழக்கம். ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதே இறுதியாக வழங்கப்பட்டது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி ஹாப்கின்ஸ் விழாவுக்கு வராததால், அவரது உரை ஏதும் இல்லாமல் ஆஸ்கர் விழா நிறைவடைந்தது. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

அந்தோணி ஹாப்கின்ஸ் விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், விழா நிறைவடைந்த பிறகு அவர் வெளியிட்ட காணொலி பதிவில், ""எனக்கு 83 வயதாகிறது. ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதன் காரணமாகவே விழாவில் கலந்து கொள்ளவில்லை. விருதுக்குத் தேர்ந்தெடுத்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார். 

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அதிக வயதில் பெற்றவர் என்ற பெருமையையும் ஹாப்கின்ஸ் பெற்றார். 

பெரும் திருப்பம் - ஏமாற்றம்

"மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம்' திரைப்படத்தில் நடித்த சாட்விக் போஸ்மேனுக்கே சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும் திருப்பமாக அந்தோணி ஹாப்கின்ஸ்-க்கு அந்த விருது வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்து, சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டனர்.  சாட்விக் போஸ்மேன் அண்மையில் காலமானது நினைவுகூரத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →