உலகம்

’இந்தியாவிற்கு உதவ தயாராக இருக்கிறோம்’: தைவான்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தைவான் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டசாய் இங் வென் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3,23,144 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,771 போ் உயிரிழந்துள்ளனா். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேசிய தைவான் நாட்டு அதிபர் டசாய் இங் வென், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு இந்த கடினமான சூழலில் தைவான் அரசு உடன் நிற்கிறது” எனத் தெரிவித்தார். 

மேலும், “இந்த இக்கட்டான சூழலில் தைவான் அரசு இந்தியாவிற்கு உதவத் தயாராக இருக்கிறது” என அவர் தெரிவித்தார். இதுவரை பிரான்ஸ், ரஷியா,. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சீனம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT