உலகம்

வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா தீநுண்மி வெளியானது: அமெரிக்க எம்.பி.க்கள் அறிக்கை

DIN

சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான் கரோனா தீநுண்மி கசிந்ததாக அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே எழுந்த நிலையில் அதை சீனா மறுத்து வந்தது. இதையடுத்து, கரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க அதிபா் பைடன் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி. மைக் மெக்கால் தலைமையிலான அக்கட்சி எம்.பி.க்கள் ஓா் ஆய்வறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டனா். அதில், வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா தீநுண்மி கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT