கோப்புப்படம் 
உலகம்

காலநிலை மாற்றம்: ஐநா அறிக்கை வெளியீடு

கால நிலை மாற்றம் குறித்த முக்கிய அறிக்கையை ஐநா இன்று வெளியிடுகிறது.

DIN

பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் நம்மிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதற்கு உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல்மட்டம் அதிகரித்ததுமே காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இவை எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த அறிக்கையை ஐநா காலநிலை அறிவியல் குழு இன்று (திங்கள்கிழமை) வெளியிடவுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு வாரமாக இணைய வழி மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, காலநிலை மாற்றம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அரசுக் குழுவுக்கு 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன. இது, கடந்த காலம் மற்றும் எதிர்கால காலநிலை மாற்றம் குறித்த தரவுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. 

காலநிலை மாற்றம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அறிக்கை விரிவாக பேசவுள்ளது. இந்தியா, சீனம், வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT