லண்டன் : 5 பேரைக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த கொலையாளி 
உலகம்

லண்டன் : 5 பேரைக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த கொலையாளி

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

DIN

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

இதை எதிர்பார்க்காத பொதுமக்களில் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இருப்பினும் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலையாளியைப் பிடிக்கும் நோக்குடன் சுற்றிவளைத்த காவல்துறைக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொலையாளியும் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 10 வயது சிறுவனும் அடக்கம் என்பதால்  சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பிளைமவுத் மாகாண அமைச்சர் ஜானி மெர்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'கொலைக்கான காரணத்தை தேடி வருகிறோம். ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT