உலகம்

இந்தோனேசியாவில் கரோனா சிகிச்சை மையமாக மாறிய பயணிகள் கப்பல்

DIN

இந்தோனேசியாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் கரோனா அதிகம் பாதித்தநாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா உள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டின் ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தொற்று பாதித்தவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று தற்காலிக கரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது.தெற்கு சுலவேசி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு கரோனா பாதித்தவர்கள் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் கரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 60 மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்தோனேசியாவில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 37 லட்சத்து 74 ஆயிரத்து 155 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT