உலகம்

ஹைட்டி நிலநடுக்கம்: பலி 1,297 ஆக உயர்வு; 5,700 பேர் காயம்

DIN

ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-யைத் தாண்டியுள்ளது. 5,700 பேர் காயமடைந்துள்ளனர். 

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 எனப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில், இடிபாடுகளிலிருந்து 304 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 420 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்தது. 

இதையடுத்து, மேலும் 573 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து பலி எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 5,700 பேர் காயமடைந்துள்ளனர். 

முன்னதாக, தலைநகா் போா்டோபிரின்ஸுக்கு மேற்கே சுமாா் 125 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, கரோனா பரவல், வறுமை, அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவற்றில் சிக்கித் திணறும் ஹைட்டியில், தற்போது இந்த நிலநடுக்கம் காரணமாக நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுமார் 13,000 கட்டடங்கள் இடிந்துள்ளன. வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

இவை மட்டுமின்றி, அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள கிரேஸ் புயல் ஹைட்டியை திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளது மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், இந்த ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT