உலகம்

ஹைட்டி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,419 ஆக உயர்வு

DIN

ஹைட்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 1,419 -ஆக உயர்ந்திருக்கிறது.  மேலும்  காயமடைந்த 7,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. தலைநகா் போா்டோபிரின்ஸுக்கு மேற்கே சுமாா் 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன. அதில் வசித்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினா். உயிரிழந்தவா்களின் உடல்கள், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது  நிலநடுக்கத்தால் 1,419 போ் உயிரிழந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும்  அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு கட்டடங்களும்  இடிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT