பிலிப்பின்ஸ் : 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை 
உலகம்

பிலிப்பின்ஸ் : 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிலிப்பின்ஸ் நாட்டின் சமர் பகுதியில் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

பிலிப்பின்ஸ் நாட்டின் சமர் பகுதியில் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இராணுவத் தலைவர் ரமோன் சகலா தாக்குதல் குறித்து அளித்த தகவலில் , ' 'நியூ பீபுள்ஸ் ஆர்மி' அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை உறுதி செய்த ராணுவ ரகசியப் பிரிவின் தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதலில் ஈடுபட்டோம். அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை  தாக்க ஆரம்பித்தனர் . உடனே பதில் தாக்குதல் கொடுத்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து 19 சக்திவாய்ந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது ' எனத் தெரிவித்தார்.

'நியூ பீபுள்ஸ் ஆர்மி' என்கிற அமைப்பு 1969 ஆம் ஆண்டு முதலே அரசிற்கு எதிராக போராடிவரும் அமைப்பாகும்.

தற்போது இந்த அமைப்பில்  3,000 பேர் இருப்பதும் , முக்கியமாக  கிராமங்களில் தாக்குதலை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!

விழா நாள்களில் பூக்கும்

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

நவராத்திரியும் கொலுவும்!

SCROLL FOR NEXT