உலகின் பிரபலம் வாய்ந்த 125 இடங்கள் ஊதா நிறத்தில் மின்னிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
ஆகஸ்ட் 24ஆம் தேதி டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி, எம்பயர் ஸ்டேட் கட்டடம், லண்டனில் உள்ள ரோம் கோலொசியம் உள்ளிட்ட உலகின் பிரபலம் வாய்ந்த 125 இடங்கள் ஊதா நிற வண்ண விளக்குகளால் ஒளிரவைக்கப்பட்டன.
இதையும் படிக்க | குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை
பாரா ஒலிம்பிக் போட்டியையொட்டி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் இணையம் என்கிற அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் அனைவரைப் போலவும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 30 நாடுகளில் உள்ள 125 இடங்கள் ஊதா நிற வண்ணங்கள் ஒளிர்ந்தன.
உலகின் மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்பதை குறிப்பிடும் வகையில் ’நாங்கள் 15’ என்கிற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வில் எந்தவொரு வடிவத்திலும் மாற்றுத்திறனாளிகள் பேதத்துடன் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.