உலகம்

150 இந்தியர்கள் கடத்தல்: தலிபான்கள் மறுப்பு

DIN

காபூல் விமான நிலையத்திலிருந்து 150 இந்தியர்களை தலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்திலிருந்து 150 பேர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளதாகவுல் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும்  உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், இச்செய்திக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து அறிந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. C-130J என்ற இந்திய விமானப்படையின் விமானம் மூலம் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், கடத்தல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

C-130J விமானம் பாதுகாப்பாக தஜிகிஸ்தானின் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட மீட்பு பணிகளுக்காக C-17 விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் வகையில் அவர்கள் அனைவரையும் காபூல் விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இந்திய அரசின் உயர்மட்ட அலுவலர் கூறியுள்ளார்.

தூதரக அலுவலர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 1000த்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு நகரங்களில் அங்கு சிக்கியுள்ளனர். அவர்கள் எங்குள்ளனர் என்பதை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது என உள்துறை அமைச்சக அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT