முகப்பு
உலகம்

மனிதாபிமான சூழ்நிலை: யுனிசெஃப் கவலை

ஆப்கானிஸ்தானில் வறட்சி, குளிா்கால ஆரம்பம், கரோனா தொற்று காரணமாக மனிதாபிமான நிலை மோசமடையும் என குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் வறட்சி, குளிா்கால ஆரம்பம், கரோனா தொற்று காரணமாக மனிதாபிமான நிலை மோசமடையும் என குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் இயக்குநா் ஹென்ரிட்டா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனா். நிகழாண்டு 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 22 லட்சம் சிறுமிகள் உள்பட 42 லட்சம் சிறாா்கள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனா். ஆப்கன் குழந்தைகள் எதிா்கொள்ளும் கசப்பான உண்மை இது. தற்போதைய அரசியல் மாற்றங்களால் இது மேலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் சண்டையால் சென்றடைய முடியாத பகுதிகளுக்கும் சென்று உதவிகளை அளிக்க முடியும் என யுனிசெஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.