முகப்பு
உலகம்

சாட் முன்னாள் சா்வாதிகாரி கரோனாவுக்கு பலி

வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் முன்னாள் சா்வாதிகாரி ஹிசேன் ஹாப்ரே, கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் முன்னாள் சா்வாதிகாரி ஹிசேன் ஹாப்ரே, கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.

79 வயதாகும் அவா், 1982 முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலான தனது ஆட்சிக் காலத்தின்போது மனித குலத்துக்கு எதிராகக் குற்றமிழைத்ததாக அவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்தகைய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட முதல் முன்னாள் ஆட்சியாளா் ஹிசேன் ஹாப்ரேதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா், செனெகல் தலைநகா் டகாரிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.