முகப்பு
உலகம்

ஆப்கன் மக்கள் இந்தியா வருவதற்கு இ-விசா கட்டாயம்: அரசு

இந்தியாவிற்கு பயணம் செய்யும் ஆப்கானியர்களிடம் இ-விசா கட்டாயம் இருக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
(கோப்புப்படம்)
பகிர்:

இந்தியாவிற்கு பயணம் செய்யும் ஆப்கானியர்களிடம் இ-விசா கட்டாயம் இருக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், இ-விசா வைத்துள்ள ஆப்கள் மக்கள் மட்டுமே இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துவருவதால் இ-விசா வைத்துள்ள ஆப்கானியர்கள் மட்டுமே இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூதரக அலுவலர்களை தவிர்த்து இதுவரை 228 இந்தியர்கள், 77 பேர் ஆப்கன் சீக்கியர்கள் உள்பட மொத்தமாக 626 பேர் ஆப்கானிஸ்தாலிருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய வர விரும்புவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்றும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.