முகப்பு
உலகம்

துருக்கி: காபூல் விமான நிலையத்தை இயக்க தலிபான்கள் அழைப்பு

காபூல் விமான நிலையத்தை இயக்குவதற்காக தலிபான்கள் தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

காபூல் விமான நிலையத்தை இயக்குவதற்காக தலிபான்கள் தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் எா்டோகன் கூறியதாவது:

காபூல் விமான நிலையத்தை இயக்க வேண்டும் என்று தலிபான்கள் எங்களைக் கேட்டுக்கொண்டனா். எனினும், இதுதொடா்பாக நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு முழுமையாக அமைந்த பின்னரே இதுகுறித்து முடிவெடுப்போம் என்றாா் அவா்.

ஆப்கனிலிருந்து நேட்டோ படையினா் வெளியேறிய பிறகு காபூல் விமான நிலையத்தின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்ள துருக்கி விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.