முகப்பு
உலகம்

ஜப்பான் ஒகினாவாவில் மாடர்னா தடுப்பூசிக்கு தடை

மாடர்னா தடுப்பூசியில் மாசு கண்டறியப்பட்டதையடுத்து,  அதன் பயன்பாட்டிற்கு ஜப்பான் ஒகினாவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப்படம்
பகிர்:


மாடர்னா தடுப்பூசியில் மாசு கண்டறியப்பட்டதையடுத்து,  அதன் பயன்பாட்டிற்கு ஜப்பான் ஒகினாவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசியில் மாசு கண்டறியப்பட்டதையடுத்து, ஜப்பான் ஒகினாவா பகுதியில் அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் மாடர்னா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்றுவருதாக ஜப்பான் சுகாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. உயிரிழப்பின் காரணம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தடுப்பூசியில் மாசு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மாடர்னா தடுப்பூயின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருவரின் உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்மந்தம் உள்ளதா என்பது குறித்து இப்போதக்கு தெரியவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாடர்னா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த மரணங்கள் மாடர்னா கோவிட் -19 தடுப்பூசியால் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை, மேலும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய முறையான விசாரணை நடத்துவது முக்கியம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்ட சில நாள்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை அன்று தடுப்பூசி உற்பத்திக்கு மூன்று இடங்களில் தடை விதிக்கப்பட்டது. அந்த மூன்று உற்பத்தி மையங்களிலிருந்து வந்த தடுப்பூசிகளைதான் இறந்தவர்கள் செலுத்தி கொண்டுள்ளனர். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள 863 தடுப்பூசி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 1.63 மில்லியன் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →