உலகம்

இந்தோனேசியா: எரிமலை வெடிப்பில் 3,000 வீடுகள் சேதம், 15 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று முன் தினம்(டிச.4) திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியது. 

இச்சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் 15 பேர் உயிரிழந்ததோடு , 27 பேர் மாயமாகியிருக்கிறார்கள். 

மேலும் எரிமலை அருகே இருந்த 3,000-க்கு மேற்பட்ட வீடுகளும் , 38 பள்ளிகளும் சேதமடைந்தன. 

இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில்  எரிமலை அருகே வசித்தவர்கள் பலர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதுவரை 15 பேர் உடல்களை மீட்டுப் பணியில் ஈடுபட்டவர்கள் மீட்டுள்ளனர். 100 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
அவர்களில் 57 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT