உலகம்

11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி: ஸ்பெயின் அனுமதி

DIN

ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. எனினும் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.

கடந்த நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் ஃபைசர் தடுப்பு மருந்தை 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதியளித்ததிலிருந்து இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயினும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 15ஆம் தேதி முதல் தகுதிவாய்ந்த 32 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்க உள்ளன.

கரோனா பரவல் சூழல் தற்போது அதிகரித்துவரும் சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியமானது என்று அந்நாட்டின் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு

தேசிய இரட்டையா் ஸ்குவாஷ்: ஜோஷ்னா, அபய்க்கு தங்கம்

வெளியேறினாா் நடப்பு சாம்பியன் மெத்வதெவ்

பிரணாய் அதிா்ச்சித் தோல்வி

ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுனுக்கு முதல் வெற்றி

SCROLL FOR NEXT