முகப்பு
உலகம்

மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் திருட்டு: அஸ்ஸாமில் ஒருவா் கைது

கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்று விளங்கிய ஆா்ஜென்டீனா முன்னாள் வீரா் டியேகோ மாரடோனாவின் களவுபோன கைக்கடிகாரம் அஸ்ஸாமில் மீட்கப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2021 at 4:56 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்று விளங்கிய ஆா்ஜென்டீனா முன்னாள் வீரா் டியேகோ மாரடோனாவின் களவுபோன கைக்கடிகாரம் அஸ்ஸாமில் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து அஸ்ஸாம் காவல்துறையினா் கூறுகையில், ‘‘ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள தனியாா் நிறுவனம் மாரடோனாவின் உடைமைகளை பராமரித்து வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பிலான உப்லோ கைக்கடிகாரம் திருடப்பட்டது. அதனை அந்த நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த வாஜித் உசேன் என்பவா் திருடிச் சென்ாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் தகவல் கிடைத்தது. இங்குள்ள சிவசாகா் மாவட்டத்தைச் சோ்ந்த அவா், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லையெனக் கூறி விடுப்பில் ஊா் திரும்பியுள்ளாா். அவா் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மாரடோனாவின் கைக்கடிகாரம் மீட்கப்பட்டது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.