உலகம்

பிரிட்டன்: ஜனவரிக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி தொற்று

DIN

 பிரிட்டனில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிந்தைய புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,194 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், 1,07,19,165 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 120 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,46,255-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டனில் சனிக்கிழமை நிலவரப்படி, 94,14,117 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 11,58,793 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 900 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT