உலகம்

வடகொரியா: பொதுமக்கள் சிரிக்கத் தடை

DIN

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10 ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வடகொரிய மக்கள் சிரிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வடகொரியாவின் தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அவருடைய 10-வது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக வடகொரியாவில் உள்ள பொதுமக்கள் இன்றிலிருந்து 11 நாள்கள் சிரிக்கவோ , கொண்டாட்டங்களில் ஈடுபடவோ , மது குடிக்கவோ கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக , இந்தாண்டு தொடக்கத்தில் தன்னைப் போல் யாரும் சிகை அலங்காரம் வைக்கக் கூடாது, மெலிதான ஜீன்ஸ் அணியக் கூடாது எனக் கூறிய கிம் ஜாங் உன் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டதும் இணையத்தில் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT