ஒமைக்ரான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்ரிக்கா எப்படி உள்ளது?
ஒமைக்ரான் எனும் பல மடங்கு உருமாறிய கரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்ரிக்காவில், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 91.55 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் எனும் பல மடங்கு உருமாறிய கரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்ரிக்காவில்தான். இந்த நிலையில், ஆப்ரிக்காவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 91.55 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, ஆப்ரிக்காவில், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 91,55,691 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்ரிக்க யூனியனின் சிறப்புவாய்ந்த சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்னாப்ரிக்காவில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,25,967 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 83,29,481 ஆக உள்ளது.
Advertisement
Advertisement
தென்னாப்ரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள்தான், அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, தென்னாப்ரிக்காவில், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 32,92,609 ஆக உள்ளது. அடுத்தபடியாக, வடக்கு ஆப்ரிக்க நாடானா மொராக்கோ 9,52,628 பேர் கரோனாவால் பாதித்துள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.