ஒமைக்ரான் தொற்று: நெதர்லாந்தில் பொதுமுடக்கம் அமல் 
உலகம்

ஒமைக்ரான் தொற்று: நெதர்லாந்தில் பொதுமுடக்கம் அமல்

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில் நெதர்லாந்தில் ஊரடங்கை அறிவித்திருக்கிறார்கள்.

DIN

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில் நெதர்லாந்தில் ஊரடங்கை அறிவித்திருக்கிறார்கள்.

ஐரோப்பா நாடுகளில் சமீப நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. பல்வேறு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் இருக்கிறது. 

குறிப்பாக நேற்று (டிச.19) இங்கிலாந்தில் 82,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் , உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் தொற்றும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் முன் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டும் நேற்று (டிச.19) முதல் வருகிற ஜனவரி -14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இதனால் , வணிக வளாகங்கள் , உணவகங்கள் , திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும்,  கிரிஸ்துமஸ் பண்டிகைக்கும் , புத்தாண்டு கொண்டாடத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT