பிலிப்பின்ஸ் : கடும் சூறாவளியால் 208 பேர் பலி 
உலகம்

பிலிப்பின்ஸ் : கடும் சூறாவளியால் 208 பேர் பலி

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட பலத்த சூறாவளிக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது. 

DIN

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட பலத்த சூறாவளிக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது. 

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த வியாழக்கிழமை உருவான ராய் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக நேற்று(டிச.19) 146 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

கடும் சூறாவளியின் தாக்கத்தால் 239 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 52 பேர் மாயமாகியிருக்கிறார்கள். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியிருப்பதாகவும் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மீட்புப்படையினர் தெரிவித்தனர். 

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ராய் சூறாவளி இந்த ஆண்டில் பதிவான மோசமான சூறாவளியாக மாறியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!

விழா நாள்களில் பூக்கும்

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

நவராத்திரியும் கொலுவும்!

SCROLL FOR NEXT