லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரையொதுங்கியதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லிபியாவின் மேற்குக் கடலோர நகரமான காம்ஸில் 27 அகதிகளின் சடலங்கள் சனிக்கிழமை இரவு கரையொதுங்கின. இதுதவிர, மேலும் 3 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனா். ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளாதில் அந்த 27 பேரும் பலியானதாகக் கருதப்படுகிறது.
அதையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.