முகப்பு
உலகம்

பிரேசில்: வெள்ளப்பெருக்கால் 18 பேர் பலி, 280 பேர் காயம்

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 18 பேர் பலியானதோடு 280 பேர் காயமடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 18 பேர் பலியானதோடு 280 பேர் காயமடைந்தனர்.

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் கடந்த செவ்வாய்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால் 40 நகரங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் , அப்பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.  280-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பேரிடர் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , கனமழை தொடர இருப்பதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அம்மாகாண ஆளுநர் ருய் கோஸ்தா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →