முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் முதல் ஒமைக்ரான் பலி

ஆஸ்திரேலியாவில்  முதல் ஒமைக்ரான் பலி ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
ஒமைக்ரான் தொற்று
பகிர்:

ஆஸ்திரேலியாவில்  முதல் ஒமைக்ரான் பலி ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக புதிய கரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கடந்த வியாழக்கிழமை கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில் உலகம் முழுவதும் உருமாறிய புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலியானவர் 2 தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்.

மேலும், நீயூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →