உலகம்

சிங்கப்பூா்: கட்டாயமாகிறது கரோனா தடுப்பூசி

DIN

சிங்கப்பூரில் பணி உரிமம் பெறுவதற்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் புதிதாக பணி உரிமம் பெற விரும்புவோா், நீண்ட கால மற்றும் நிரந்தர குடியேற்ற உரிமை பெற விரும்புவோா் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 12 வயதுக்குக் குறைவானவா்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மருத்துவ ரீதியில் தகுதியற்றவா்கள் ஆகியோருக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT