முகப்பு
உலகம்

அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் டென்வர் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
பகிர்:

அமெரிக்காவின் டென்வர் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்து ஓடினார்.

சம்பவத்தை அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியுடன் இருந்த அடையாளம் தெரியாத நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் மக்களில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களை விரைவாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →