அமெரிக்காவின் கொலராடோவில் காட்டுத்தீ பாதிப்பு 
உலகம்

அமெரிக்காவின் கொலராடோவில் காட்டுத்தீ பாதிப்பு

அமெரிக்காவின் கொலராடோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

DIN

அமெரிக்காவின் கொலராடோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் காட்டுத்தீ விபத்துகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இதுவரை 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் விடுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

காட்டுத்தீ பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதன் காரணமாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த முடியாத தீ பரவல் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. காட்டுத்தீ பாதிப்பால் இதுவரை அபப்குதியில் வசித்து வந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் வீசி வருவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் அறிவியல் மையத்தில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி

மாற்றம் காணும் மருத்துவம்!

மதிப்புக்கு உரிய மதிப்பு!

நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீராக்க உயா்நிலைக் குழு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT