முகப்பு
உலகம்

மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை

மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. 
மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி அறிவித்தது. 
ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இதனிடையே மியான்மரில் நாடாளுமன்ற இன்று கூடவுள்ள நிலையில் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. 
பொதுச்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசரநிலை அமல் என ராணுவம் விளக்கமளித்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →