முகப்பு
உலகம்

காபூலில் வெடி விபத்து: இரண்டு வீரர்கள் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூலில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட வெடிவிபத்தில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:12 PM
Two soldiers injured in explosion in Afghanistan's Kabul
பகிர்:

ஆப்கானிஸ்தானின் காபூலில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட வெடிவிபத்தில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

காபூலின், ஜாய் ஷெர் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

Advertisement

காபூலின் பி.டி-7 இல் இராணுவ வாகனம் மீது திங்களன்று குறிவைத்துத் தாக்கப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் ஒருவரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்று காபூல் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, இன்று இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.