முகப்பு
உலகம்

கரோனா அச்சுறுத்தல்: 20 நாட்டுப் பயணிகளுக்கு தடை விதித்த செளதி அரேபியா

கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு செளதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
கரோனா அச்சுறுத்தல்: 20 நாட்டுப் பயணிகளுக்கு தடை விதித்த செளதி அரேபியா
பகிர்:

கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு செளதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

செளதி அரேபியாவில் கரோனா தொற்று பரவிவருவதைத் தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செளதிஅரேபியாவில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 3 முதல் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அர்ஜென்டினா , பிரேசில், இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், போர்ச்சுகல், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாட்டின் பயணிகள் செளதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தடை செளதி குடிமக்கள், தூதர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்காக தடைக் காலத்தின் அளவு பின்னர் அறிவிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.