ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் சார்-இ-புல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தலிபான்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.