முகப்பு
உலகம்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்

மியான்மரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை எதிர்த்து ஜப்பான் நாட்டில் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்
பகிர்:

மியான்மரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை எதிர்த்து ஜப்பான் நாட்டில் போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கரோனா தொற்று பாதிப்பிற்கு மத்தியில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் கட்சி அபார வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராணுவம் கூறி வந்தது.

இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் புதன்கிழமை மியான்மரில் நடந்த இராணுவ சதித்திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மியான்மர் ராணுவ ஆட்சியை ஜப்பான் அங்கீகரிக்கக் கூடாது எனவும், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →